நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஜெம் மருத்துவமனை சார்பில் கதிரியக்கக் கருத்தரங்கம்

ஜெம் மருத்துவமனை சார்பில் நோய் பாதிப்பைக் கண்டறிவது தொடர்பாக இரண்டு நாள் கதிரியக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On :26 ஜூன் 2018, 7:24 am IST

ஜெம் மருத்துவமனை சார்பில் நோய் பாதிப்பைக் கண்டறிவது தொடர்பாக இரண்டு நாள் கதிரியக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
 கோவை, ஜெம் மருத்துவமனை சார்பில் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கதிரியக்கக் கருத்தரங்கை மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தொடக்கி வைத்தார். 
இந்தக் கருத்தரங்கில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
 இதில், புணே ரூபி ஹால் மருத்துவமனையின் கதிரியக்கத் துறை இயக்குநர் அவினாஷ் நானி வடேகர் பேசியதாவது: 
 கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் தொடர்பாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நோயைத் துல்லியமாக கண்டறிவது அவசியம். அப்போது, நோய் பாதிப்புக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
 இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட கதிரியக்க நிபுணர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 
இதில், டாக்டர்கள் பெரியகருப்பன், குப்புராஜ், கார்த்திக் கணேசன், கே.எஸ்.முருகன், கே.கோபிநாதன், அருண் ராம்ராஜ் உள்ளிட்ட 125 கதிரியக்க நிபுணர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.