/

கேரள கழிவுகளைத் தமிழகத்தில் கொட்டிய லாரி பறிமுதல்

கேரளத்தில் இருந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தமிழகப் பகுதிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

Updated On :26 ஜூன் 2018, 7:21 am IST

கேரளத்தில் இருந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தமிழகப் பகுதிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
கேரளத்தில் இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை பொது இடத்தில் கொட்ட அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மீறி கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 
இதனால், கேரளத்தில் இருந்து தமிழகப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்,  கேரளத்தில் இருந்து காய்கறி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளது.   அக்கழிவுகளை லாரி ஓட்டுநர் அப்பகுதியில் கொட்டியுள்ளார். 
 இதையறிந்த கோபாலபுரம் சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள்,  கழிவுகளைக் கொட்டிய லாரியை பறிமுதல் செய்தனர்.
 மேலும்,  லாரி ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த  சுகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.