காரமடையில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 500 பேருக்கு இலவச மரக்கன்றுகள்

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, காரமடை நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 
Updated on
1 min read

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, காரமடை நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 
  காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு திமுக நகரச் செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கலை,இலக்கிய அணி துணைச் செயலர் கலிங்கா கணேஷ்,  சிறுமுகை நகரச் செயலர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று  மாணவ, மாணவியருக்கு இலவசமாக மரக்கன்றுகளையும், ரோஜா, மல்லி பூச்செடிகளையும், விவசாயிகளுக்கு பப்பாளி, தென்னை, சப்போட்டா, புங்கை, ஆலமரக் கன்றுகளையும் வழங்கினார்.
  கட்சியின் துணைச் செயலர்கள் பாபு பிரபாகரன், அரவராஜ், நாகஜோதி  உள்ளிட்ட கட்சியினர்,  பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, காரமடை நகரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமயில் 65 கிலோ கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com