தமிழகம் முழுவதிலும் மார்ச் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 36,833 மாணவ,மாணவிகள் இந்தத் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. கோவை கல்வி மாவட்டத்தில் 30,028 மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 6,805 மாணவ, மாணவிகள் எனமொத்தம் 36,833 மாணவ,
மாணவிகள் இத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, கோவை கல்வி மாவட்டத்தில் 86 தேர்வு மையங்கள், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்கள் என மொத்தம் 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வை 2,070 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். இவர்களுக்காக கோவை, பொள்ளாச்சியில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வு காலை 10.15 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறும்.
கடந்த ஆண்டு 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிப்பதற்காக அறைக் கண்காணிப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு குடிநீர், தடையற்ற மின்சாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.