லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7ஆண்டு சிறை

கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 

Updated On :29 மார்ச் 2018, 3:05 am

கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 
மதுரை மாவட்டம்,  பைகாரா,  இ.பி. பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் தினேஷ்குமார் (24).  இவர், கோவை, இடையர்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை தினேஷ்குமார் மதுரைக்கு காரில் 2014 ஜூன் 26-ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.  பின்னர் அதே ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி திருப்போரூரில் வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். மேலும்,  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ்குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போஸ்கோ) குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தினேஷ்குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கானது கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து  நீதிபதி (பொறுப்பு) ஜி.விஜயா செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.  இதில்,  தினேஷ்குமாருக்கு கடத்தல் குற்றத்துக்கு 7 ஆண்டும்,  பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டும் சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும்,  அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சரோஜினி ஆஜரானார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.