தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

முறையாக இயங்காத ஆதார் மையம்: பொதுமக்கள் புகார்

மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் முறையாக இயங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:59 am

மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் முறையாக இயங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுக்கரை கடை வீதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.  
இங்கு புதிதாக ஆதார் பெற விண்ணப்பிக்கவும்,  ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனால் தினமும் பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்து செல்கின்றனர். 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த மையம் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லையாம். அவ்வாறு பணியில் இருந்தாலும் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாகக் கூறி அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
எனவே, ஆதார் மையத்துக்கு பணியாளர்கள் சரியான நேரத்தில் வரவும், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.