கோவையில் ரௌடி ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாக 4 இளைஞர்களை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது திண்டுக்கல், நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த ராக்கெட் ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை வ.உ.சி.பூங்கா, சிறைச்சாலை மதில் சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கோவை, குறிச்சியைச் சேர்ந்த பி.யாசர் அராபத் (24), கோட்டை மேட்டைச் சேர்ந்த சதாம் உசேன் (20), சிவகங்கையைச் சேர்ந்த ஜெ.திருநாவுக்கரசு (23), பி.கே.புதூரைச் சேர்ந்த வி.நிமேஷ் (26) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், காவல் நிலையப் பிணையில் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

