தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கடையின் ஷட்டரை உடைத்து 10 பவுன் திருட்டு

கோவையில் பேன்சி கடையின் ஷட்டரை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 2:27 am

கோவையில் பேன்சி கடையின் ஷட்டரை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் (58). இவர், கோவை ஆடீஸ் வீதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையைப் பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர், வழக்கம் போல கடையைத் திறக்க சனிக்கிழமை காலை வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 
 மேலும், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மோதிரம், வளையல் உள்பட 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.