கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு கோவை தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன.
கேரளத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் திருச்சூர், வயநாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பொருள்கள் சரக்கு ஆட்டோ மூலமாக கோவையில் இருந்து கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன.
இந்தப் பொருள்கள் திருச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ளன.
அதே போல், கோவை, தனலட்சுமிபுரத்தில் உள்ள கேரள கலாசார மையம் சார்பில் ரூ. 35 லட்சத்து 45 ஆயிரத்துக்கு வரைவோலை, காசோலைகள் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக அண்மையில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

