20 ஆண்டுகளுக்குப் பின் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை

பணிக்கொடை தொகை பெறாமல் 20 ஆண்டுகளாக தவிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

பணிக்கொடை தொகை பெறாமல் 20 ஆண்டுகளாக தவிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் பணிக்கொடைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது தெரிவித்துள்ளார்.
வால்பாறையை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக பணிக்கொடைத் தொகை வழங்காமல் உள்ளனர். அரசு அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. இதனிடையே எஸ்டேட் நிர்வாகத்தினர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணிக்கொடை தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு நேரடியாகச் சென்ற வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விரைவில் பணிக்கொடைத் தொகையை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். 
இதன்படி, தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. விரைவில் 79 தொழிலாளர்களுக்கு பணிக்கொடைத் தொகை ரூ.36 லட்சத்து 53 ஆயிரத்து 921 வழங்க இருப்பதாக அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.