குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கிஸான் சம்மான் நிதி திட்டம்: விவசாயிகள் பதிவு செய்ய 3 நாள் சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை இணைக்கும்

Updated On :25 பிப்ரவரி 2019, 10:10 am IST

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை இணைக்கும் வகையில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
 மத்திய அரசு சார்பில் 2 ஹெக்டர் வரையில் சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் வகையில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தை அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, அனைத்து மாவட்டத்திலும் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 அதன்படி, கோவை மாவட்டத்திலும் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தில், இதுவரை விண்ணப்பிக்காத சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: 
கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் குறித்து மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இதுவரை விண்ணப்பிக்காத சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகியத் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
 பட்டா, ஆதார் எண், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு எண் மற்றும் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் விவசாயிகள் தங்களது கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.