இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு நிதி திரட்டிய காவல் துறையினர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு அவருடன் பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த காவல் துறையினர் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:11 am IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு அவருடன் பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த காவல் துறையினர் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.
கோவை மாநகர காவல் துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் வனிதா. காவலராகப் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் சேலத்துக்கு இடமாறுதலாகிச் சென்றார்.  இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து, இவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் இணைந்து இதற்காக பிரத்யேக கட்செவி அஞ்சல் குழுவைத் தொடங்கி அதன் மூலம் காவலர் வனிதாவின் சிகிச்சைக்காகப் பணம் திரட்டினர். இதன்மூலம் சுமார் ரூ.2 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டது. 
இதுகுறித்து வனிதாவுடன் பணியாற்றிய காவலர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண் காவலர்களின் முயற்சியைப் பாராட்டிய அவர், அவர்கள் சேலம் சென்று வருவதற்காக வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன்மூலம் சேலம் சென்ற அவர்கள் வனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சிகிச்சைக்கு திரட்டப்பட்ட நிதியை 
வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.