மேட்டுப்பாளையம் அருகே காரமடை டாக்டர் ஆர்.வி கலை, அறிவியல் கல்லூரியில் விதைப் பந்து தயாரிப்பு குறித்து பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கல்லூரிச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வே.சுகுணா முன்னிலை வகித்தார். அவிநாசி ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி, ரா.பத்மபிரியா ராமசாமி ஆகியோர் மாணவ , மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும் , இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப் பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1,300 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை நட்புச் சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் கி.சின்னராஜ், அ.செந்தில்குமார் செய்திருந்தனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!

துல்கர் சல்மான் - கயாது லோஹர் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


