ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

சூலூர் பி.எஸ்.என்.எல்.  அலுவலகத்தில் தீ

சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மின் கேபிள்களில் புதன்கிழமை தீபற்றியது. சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

Updated On :24 ஜனவரி 2019, 2:30 am IST

சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மின் கேபிள்களில் புதன்கிழமை தீபற்றியது. சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள மின் கேபிள்களில் புதன்கிழமை மதியம் தீ பற்றியது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். உதவி மண்டல தொலை தொடர்பு அலுவலர் சுதா கூறியதாவது: 
அலுவலக நுழைவு வாயிலில் உள்ள அறையில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சுவரில் பதிக்கப்பட்டு உள்ளது. இதில், திடீரென கருகிய வாசனை வந்தது. உடனே இது குறித்து சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து கேபிள்களை சோதனை செய்தனர் என்றார். 
இதுகுறித்து சூலூர் தீயணைப்பு அலுவலர் கூறுகையில், மின்கசிவால் தீப்பிடித்துள்ளது. உடனடியாக தகவல் கிடைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. கருகிய கேபிள்கள் மேல் மேற்கொண்டு தீ பரவாத வகையில் உலர்ந்த ரசாயன பொடி தூவப்பட்டுள்ளது என்றனர். 
பாதுகாப்பு காரணம் கருதி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் சூலூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சிக்னல் மதியம் முதல் 
சரியாக கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.