நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞர் கைது

பொள்ளாச்சியில் பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :24 ஜனவரி 2019, 2:24 am IST

பொள்ளாச்சியில் பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமாவதி (59). இவர் பொள்ளாச்சி பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்வதற்காக ரூ.19 ஆயிரத்தை புதன்கிழமையன்று கொண்டுவந்துள்ளார். வங்கி அருகே கையில் பணப்பையுடன் நின்றிருந்தபோது அங்கே வந்த இளைஞர் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். 
அருகில் இருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பொள்ளாச்சி அடுத்த நல்லட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார் (21) என்பதும்  பிஎஸ்சி பட்டதாரி என்பதும் தெரிந்தது. அருண்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.