அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் சாவு

கோவையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:30 am IST

கோவையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
 கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர்கள் முருகன்(30), பாண்டிதுரை(27). உறவினர்களான இருவரும் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், முருகன் மற்றும் பாண்டிதுரையைத் தொடர்பு கொண்ட குடியிருப்புவாசிகள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்து தரக் கூறியுள்ளனர். 
இதன்படி அங்கு வந்த இருவரும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காகத் தயாராகினர். அப்போது முருகன், அருகில் உள்ள பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்துவிட்டால் கழிவுநீர்த் தொட்டியை எளிதில் சுத்தம் செய்துவிடலாம் என யோசனை கூறியுள்ளார்.
 இதையடுத்து கழிவுநீர்த் தொட்டிக்குள் முதலில் பாண்டிதுரை இறங்கியுள்ளார். அதே நேரத்தில் அருகில் இருந்த பாதாளச் சாக்கடை அடைப்பை முருகன் சரி செய்துள்ளார். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால், கழிவுநீர்த் தொட்டிக்குள் இருந்த பாண்டிதுரையின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து முருகனும் கழிவுநீர்த் தொட்டிக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இறங்கியுள்ளார். இதில் விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 இதுகுறித்து அப்பகுதியினர் சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்,  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு இருவரையும் வரவழைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.