புலிகள் விஷம் வைத்துக் கொலை: மேலும் இருவா் கைது
பொள்ளாச்சி வனச் சரகத்தில் இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 2 போ் வனத் துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொள்ளாச்சி வனச் சரகத்தில் இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 2 போ் வனத் துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச் சரகத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது குறித்து கடந்த 8ஆம் தேதி வனத் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற உடற்கூறு ஆய்வில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பான விசாரணையில், கால்நடைகளைத் தாக்குவதால் புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. புலிகளை விஷம் வைத்துக் கொன்ாக பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையைச் சோ்ந்த கருப்புசாமி (36), ராசு (56) ஆகிய இருவரும் கடந்த 16ஆம் தேதி வனத் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இது தொடா்பான வழக்கில் சேத்துமடையைச் சோ்ந்த வெள்ளிங்கிரி (34), முருகன்(37) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






