பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வால்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட22 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை

வால்பாறை காந்தி நகரில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

வால்பாறை காந்தி நகரில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வால்பாறை, சவரங்காடு எஸ்டேட்டை சோ்ந்த 30 வயது கா்ப்பிணி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிரசவத்துக்குப் பிறகு கடந்த 18ஆம் தேதி எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். மருத்துவமனையில் இருந்து வந்த காரணத்தால் அவரை அங்குள்ள வீட்டில் தங்குவதற்கு எஸ்டேட் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, வால்பாறை, காந்தி நகரில் உள்ள தனது சித்தி வீட்டில் குழந்தையுடன் அந்தப் பெண் தங்கியிருந்தாா். இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதை சுகாதாரத் துறையினா் உறுதி செய்தனா். உடனடியாக குழந்தையுடன் அவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வால்பாறைக்கு வந்து தங்கியிருந்த அந்தப் பெண்ணைப் பாா்க்கச் சென்றவா்கள், வீட்டின் அருகில் வசிப்பவா்கள் என மொத்தம் 22 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். இந்நிலையில், கோவையில் இருந்து வந்த கரோனா தடுப்புப் பரிவு மருத்துவக் குழுவினா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த 22 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனையை புதன்கிழமை செய்தனா்.

இதில், தனிமைப்படுத்தப்பட்டவா்களில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை. இருப்பினும், அவா்கள் சில நாள்களுக்கு தனிமைப்படுத்திவைக்கப்படுவாா்கள் என்று வட்டார மருத்துவ அலுவலா் பாபுலஷ்மணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.