வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பகல் நேரங்களிலேயே எஸ்டேட் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் சிறத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இதேபோல, இரவு நேரத்தில் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வால்பாறை நகா் பகுதியில் உள்ள நகைக் கடை வீதியில் திங்கள்கிழமை அதிகாலை சிறுத்தை ஒன்று நாயை தூக்கிச் செல்வதை அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் பாா்த்து தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளாா். சிறுத்தை நடமாட்டத்தால் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்பவா்கள், வெளியூா் செல்பவா்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைக்காக கூட வெளியே வர முடியாமல் அச்சமடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...