அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் காயமடைந்தார். 

News image
காயமடைந்த விவசாயி.
Updated On :13 டிசம்பர் 2020, 9:05 am

DIN

மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் காயமடைந்தார். 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் பெத்திக் குட்டைபிரிவு உளியூர் சுற்றுக்கு உட்பட்ட மொக்க மேடு பகுதியில் பட்டா நிலத்தில், தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்த நாகையன் மகன் பழனி( 35). 
இவரை சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதால் உடனே அருகில் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம்‌ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டனர்.  
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சிறுமுகை வனச்சரக அலுவலர் அவர்களின் உத்தரவின்படி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் மற்றும் சுற்று வனக்காப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து, யானை தாக்கியதை உறுதிப்படுத்திய பின்பு, மருத்துவமனைக்கு சென்று யானை தாக்கப்பட்ட நபரையும், மருத்துவரையும் சந்தித்து அவர் உடல்நிலை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்ததில் முகத்தாடை பகுதியில் உள்ள எலும்பு, வலது கையின் மணிக்கட்டு எலும்பு பகுதிகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.