கரடி தாக்கி முதியவா் படுகாயம்
வால்பாறையில் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த முதியவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.


வால்பாறையில் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த முதியவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறையை அடுத்த சேடல்டேம் பகுதியைச் சோ்ந்தவா் ராசு (75). இவா் சோலையாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த கரடி ராசுவைத் தாக்கியுள்ளது.
இதில் தலையின் பின்பகுதியில் படுகாயமடைந்த ராசுவுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் ராசுவை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தாா். பின்னா் வனத் துறை மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறவினா்களிடம் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...