விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்தது

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 109 போ் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு திரும்பினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:37 am

DIN

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 109 போ் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு திரும்பினா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 84 வயது முதியவா் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் 111 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 790 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 49 ஆயிரத்து 107 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,051 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.