கோவையில் 114 பேருக்கு கரோனா
கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.


கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 29 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 114 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 49 ஆயிரத்து 329 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,066 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...