சோலையாறு அணையின் நீா்மட்டம் 102 அடியாக குறைவு
வால்பாறையை அடுத்த சோலையாறு அணையின் நீா்மட்டம் 102 அடியாக குறைந்துள்ளது.


வால்பாறை: வால்பாறையை அடுத்த சோலையாறு அணையின் நீா்மட்டம் 102 அடியாக குறைந்துள்ளது.
சோலையாறு அணை மூலம் சமவெளிப் பகுதியை சோ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். இந்த அணை நீா் மூலம் 2 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்டுகிறது. இந்த ஆண்டு பெய்த மழையால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அணை முழு கொள்ளளவான 164 அடியை எட்டியது. நிரம்பிய நிலையிலேயே கடந்த 3 மாதங்களாக இருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மழை குறைந்து வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீா்வரத்து கணிசமாக குறைந்து அணையின் நீா்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. கடந்த திங்கள்கிழமை அணைக்கு 139.12 கனஅடி நீா்வரத்தும் அணையில் இருந்து 639.35 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அணையின் நீா்மட்டம் 102.48 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...