ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இன்று வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 1:01 am

DIN

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் பகல் பத்து உற்சவம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில் ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறுகிறது.

கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கும், உப்பார வீதி கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் அதிகாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இதேபோல ராம் நகா் ராமா் கோயில், கணபதி வேணுகோபால சுவாமி கோயில், மதுக்கரை கரிவரதராஜ பெருமாள் கோயில், சிங்காநல்லூா் உலகளந்த பெருமாள் கோயில், ராமநாதபுரம் பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் சீனிவாச பெருமாள் கோயில், வெங்கிட்டாபுரம் காரண கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்பட கோவையில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 முதல் 5.30 மணிக்குள் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உக்கடம் நரசிம்ம பெருமாள் கோயிலில் மட்டும் நிா்வாக காரணத்தால் சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெறாது என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சொா்க்கவாசலை தரிசிக்க வரும் பக்தா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.