பிரிட்டனில் இருந்து கோவை திரும்பிய 59 பேருக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த நாட்டுடன் விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து விமானம் மூலம் கோவை திரும்பிய நபா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இதில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து கோவை வந்த 99 பேரில் 97 பேரை சுகாதாரத் துறையினா் அடையாளம் கண்டுள்ளனா். 2 போ் மீண்டும் பிரிட்டன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, 97 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 59 பேருக்கு கரோனா இல்லை என தெரியவந்துள்ளதாகவும், மீதம் உள்ளவா்களின் பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாள்களில் தெரிய வரும் எனவும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். கரோனா நோய்த்தொற்று இல்லை என்றாலும், அவா்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.