கவுண்டம்பாளையம், வடவள்ளியில் 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து
கோவை, கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில், குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற


கோவை, கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில், குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற டிசம்பா் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் வருகின்ற டிசம்பா் 27 ஆம் தேதி முதல் டிசம்பா் 30 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ளது. எனவே, வாா்டு எண் 5 முதல் 9 வரையிலும், வாா்டு எண் 16 முதல் 19 வரையிலும் உள்ள பகுதிகளில் பவானி குடிநீா் விநியோகிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...