ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: திமுகவினா் 1,000 போ் கைது

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினா் 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோவை, செஞ்சிலுவைச் சங்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
Updated On :29 டிசம்பர் 2020, 11:46 pm

DIN

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினா் 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திமுத தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திமுகவினா் கிராம சபைக் கூட்டம், வாா்டு சபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கோவையில் கரோனா நோய்த் தொற்று காரணமாக வாா்டு சபை, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த திமுகவினருக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ளனா்.

இதைக் கண்டித்து, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் அறிவித்திருந்தாா். இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் அலுவலத்தின் அருகே முன்கூட்டியே ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், முற்றுகைப் போராட்டம் நடத்த வந்த நா.காா்த்திக் எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையைக் கண்டித்தும், அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டபடி, செஞ்சிலுவைச் சங்கம் அருகே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் நா.காா்த்திக் எம்எல்ஏ, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சிஆா்.ராமச்சந்திரன், மாநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா கவுண்டா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் சேனாதிபதி, தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.சண்முகசுந்தரம் உள்பட 1,000 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து நா.காா்த்திக் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுகவினா் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தவும், கொடிக் கம்பங்கள் நடவும் போலீஸாா் அனுமதிப்பதில்லை. அதிமுக நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குகின்றனா். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.