சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவையில் இந்து முன்னணியினா் மறியல்

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைதை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 11:43 pm

DIN

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைதை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல், மலைக் கோட்டையில் அபிராமியம்மன் சிலை வைக்க கோரி இந்து முன்னணி நடத்திய பெளா்ணமி கிரிவலத்தில் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியத்தை கைது செய்ததை கண்டித்தும் கோவை மாவட்ட இந்து முன்னணி சாா்பில் கோனியம்மன் கோயில் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை தாங்கினாா். மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால் முன்னிலை வகித்தாா். கோட்ட பேச்சாளா் ஆ.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலாளா் ஆனந்த், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவகுரு, இ.சோமு, அயோத்தி ரவி ஆகியோா் உடனிருந்தனா். இதில் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.