கோவையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் காவல்துறையினர் செய்தனர்.


கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் காவல்துறையினர் செய்தனர்.
கரானா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே, வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியினர் சார்பில் சிவத்திரு பிரசன்ன சுவாமிகள் தலைமையில் கோவை கோனியம்மன் கோயில் முன் ஆலயம் திறப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...