கட்சிக் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்: தினேஷ் குண்டுராவ்
கட்சிக் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தினேஷ் குண்டுராவ்.

தினேஷ் குண்டுராவ்.
கட்சிக் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும், அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு முன்னால் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகனை சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அனைவருக்கும் பொதுவாக இல்லாமல் எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி, பொது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக கூறிய அவர், பாரபட்சம் காட்டுவதாலேயே, நேற்று நடைபெற்ற ஏர் கலப்பை யாத்திரையில் காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாட்டு மக்கள் இன்னும் கட்சியை விரும்பி வருவதாகவும், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடத்தை பிடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தொகுதி குறித்த உடன்பாடுகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கபடவில்லை எனவும், பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பிகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களே விமர்சனம் செய்த குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான நேரம் எனக் கூறிய அவர், கருத்துக்கள் கூறுவது தவறில்லை என்றார். அதே நேரத்தில், கட்சிக் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும், அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல எனத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் மாநில பொதுச் செயலாளர் செல்வம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் மற்றும் பச்சமுத்து சரவணகுமார் நடராஜ் ரங்கநாதன் மகேந்திரன் குணசேகரன் பரமசிவம் வீரகேரளம் மோகன்ராஜ் சுப்பு காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...