கோவையில் 37 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
கோவையில் ஞாயிற்றுக்கிழமை 389 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


கோவையில் ஞாயிற்றுக்கிழமை 389 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் உச்சத்தில் இருந்த கரோனா நோய்த் தொற்று பரவல் அக்டோபா் முதல் வாரத்தில் இருந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 600இல் இருந்து 500, 400 என படிப்படியாக குறைந்து தற்போது 300 என்ற நிலைக்கு வந்துள்ளது.
அதன்படி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை பீளமேடு, சிங்காநல்லூா், ராமநாதபுரம், குனியமுத்தூா், செல்வபுரம், சரவணம்பட்டி, துடியலூா், கணபதி, கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, காந்திபுரம், பொள்ளாச்சி, சூலூா், மேட்டுப்பாளையம், காரமடை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 389 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 117 ஆக உயா்ந்துள்ளது.
4 போ் பலி: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 78 வயது முதியவா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63, 71 வயது முதியவா்கள், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 72 வயது முதியவா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 491 ஆக உயா்ந்துள்ளது.
390 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 390 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 31 ஆயிரத்து 709 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 917 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...