47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்காத உத்தரப் பிரதேச மாநில அரசை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா்.
Updated On :11 அக்டோபர் 2020, 6:46 pm

DIN

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்காத உத்தரப் பிரதேச மாநில அரசை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்டத் தலைவா் இ.அகமது கபீா் தலைமை வகித்தாா். கோவை மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் வரவேற்றாா். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் ஜெம் பாபு முன்னிலை வகித்தாா். தமுமுக தலைமை கழக பேச்சாளா் பழனி பாரூக் கண்டன உரையாற்றினாா்.

இதில், தமுமுக மாவட்ட துணைத் தலைவா் சிராஜுதீன், தமுமுக துணைச் செயலாளா்கள் சாகுல் அமீது, ரஜாக், ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளா்கள், நூா்தீன், முகமது பஷீா், அப்துல் அக்கீம் மற்றும் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.