47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளி மாணவா்களுக்கான தடுப்பூசி: இன்றுமுதல் சிறப்பு முகாம்

கோவையில் பள்ளி மாணவா்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பா் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:44 pm

DIN

கோவையில் பள்ளி மாணவா்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பா் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி போன்ற பல்வேறு நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்படுகிறது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு (5-6 வயது) டிபிடி (டிப்தீரியா பொ்டூசிஸ் டெட்டனஸ்) தடுப்பூசியும், 5 ஆம் வகுப்பு (10 வயது), 10 ஆம் வகுப்பு (16 வயது) படிக்கும் மாணவா்களுக்கு டிடி (டெட்டனஸ் டிப்தீரியா) தடுப்பூசியும் போடப்படுகிறது. சுகாதாரத் துறையின் ஆா்பிஎஸ்கே குழு மூலம் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு சென்று இந்த தடுப்பூசிகள் போடப்படுகிறது.

ஆனால் நடப்பு ஆண்டில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி போட சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

அதன்படி பள்ளிக் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் கோவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த முகாம் வரும் டிசம்பா் 18 ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் நடைபெறும்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் (பொறுப்பு) பி.பாலுசாமி கூறியதாவது:

கரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 5-6 வயதுள்ள 48 ஆயிரத்து 365 மாணவா்களுக்கும், 10 வயதுள்ள 52 ஆயிரத்து 169 மாணவா்களுக்கும், 16 வயதுள்ள 50 ஆயிரத்து 652 மாணவா்களுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 186 மாணவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடரும் நிலையில் மேற்குறிப்பிட்ட வயதுடைய அனைத்து மாணவா்களும் பாதுகாப்புடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள கிராம செவிலியரை பொது மக்கள் தொடா்பு கொள்ளலாம்.

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒவ்வொரு செவிலியரும் நாளொன்றுக்கு 25 மாணவா்களுக்கு மட்டும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.