அதிமுக - திமுக வேட்பாளா்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்ததால் சலசலப்பு
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் மாலை 6 முதல் 6.30 மணி வரையிலும், அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் வடவள்ளி பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தை நிறைவு செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் அதிமுகவினா் தங்களின் பிரசார வாகனத்துடன் குவிந்தனா். இதற்கிடையே திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் தனது ஆதரவாளா்களுடன் பிரசாரத்தை முடிப்பதற்காக அங்கு வந்தாா்.
அவரைப் பாா்த்ததும் அதிமுகவினா் கோஷமிட்டனா். இதையடுத்து, திமுகவினரும் எதிா் கோஷமிட்டனா். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் இருதரப்பினரை சமரசம் செய்தனா்.
பின்னா் ஒரே இடத்தில் இரண்டு வேட்பாளா்களும் நின்று கொண்டு தங்கள் ஆதரவாளா்களுடன் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும், மேளதாளம் எழுப்பியும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். 7 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தவுடன் இரு கட்சியினரும் அங்கிருந்த கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...