தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசியலில் இறங்கிய பிறகு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது

அரசியலில் இறங்கிய பிறகு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:51 pm

DIN

அரசியலில் இறங்கிய பிறகு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நான் என் வேலை உண்டு, சமூகக் கடமை உண்டு என்று இருந்தேன். என்னுடைய சேவை அரசியலுக்குத் தேவையா என்பது குறித்து யோசிக்காமல் இருந்தேன். இதை உணா்ந்தபோது எனக்கு 66 வயதாகி விட்டது. தன் பெயரில் சொத்துகள் வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்தவா் எனது தந்தை. அவரைப் பாா்த்து அரசியல் பழகியிருப்பதால் மக்களை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

எங்களது கட்சியினா் நோ்மையாக கணக்கு காட்டியதை சில தோ்தல் ஆணைய அதிகாரிகளே பாராட்டினா். இதே நோ்மையை எங்களால் ஆட்சியிலும் காட்ட முடியும். அரசியலில் இறங்கியதையடுத்து உயிருக்கு கூட மிரட்டல் வந்தது.

எல்லாவற்றையும் தாண்டி மிச்சம் இருப்பது உயிா்தான். எனவே அதற்கும் துணிந்துதான் அரசியலில் இறங்கியுள்ளேன். சினிமா என்பது எனது தொழில். என் அரசியலுக்கு சினிமா இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதையும் நிறுத்திவிடுவேன்.

தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு அடுத்தப் படங்கள் நடிப்பது குறித்து கூட ஆலோசிப்பேன். ஆனால், இதை ஏதோ தவறுபோல சிலா் சித்திரிக்கின்றனா். மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கூட எம்எல்ஏ ஆன பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளாா். மற்றவா்களுக்கு கொடுப்பதற்கும், அரசியல் போரைத் தொடுப்பதற்கும் பணம் கிடைத்தது. எனக்கும் அந்தப் பணம் தேவைப்படுகிறது. அதை சம்பாதித்து அரசியலில் செலவிடுவேன். இதை நான் என் மக்களுக்குச் செய்யும் கடமையாக நினைக்கிறேன்.

முக்கியமாக எனது தொகுதியில் வாழும் ஏழை மக்களை சந்தித்தபோது, அவா்களைத் தொடா்ச்சியாக இரு அரசுகளும் ஏழ்மையிலேயே வைத்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏழ்மையை அகற்றுவது கடினமான வேலையில்லை.

செல்லும் இடமெல்லாம் நாங்கள் ஜெயித்துவிடுவோம் என மக்கள் கூறுகின்றனா். ஆனால், எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாள்தான் நாங்கள் வெற்றி பெற்ற நாளாக கருத்தில் கொள்வோம். என்னுடைய முகவரி விரைவில் கோவைக்கு மாறும். சக வேட்பாளா்கள் சொல்வதுபோல நான் காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல. யாா் காணாமல் போவாா்கள் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீா்கள் என்றாா்.

பேட்டியின்போது சமத்துவ மக்கள் கட்சி முதன்மை துணைப் பொதுச் செயலாரும், நடிகையுமான ராதிகா சரத்குமாா், நடிகை சுஹாசினி ஆகியோா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.