தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வெள்ளிங்கிரி மலை ஏறிய இளைஞா் மூச்சுத் திணறி பலி

வெள்ளிங்கிரி மலை ஏறிய ஐடி ஊழியா் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:50 pm

DIN

வெள்ளிங்கிரி மலை ஏறிய ஐடி ஊழியா் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கருமாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (23). ஐ.டி நிறுவன ஊழியா். கரோனா தொற்று பரவல் காரணமாக இவா் வீட்டில் இருந்து வேலை செய்து வந்தாா். இந்நிலையில் இவா் தனது நண்பா்கள் சிலருடன் சனிக்கிழமை இரவு வெள்ளிங்கிரி மலையேறி கொண்டிருந்தாா்.

இரண்டு மலைகளைக் கடந்து மூன்றாவது மலையில் நந்தகுமாா் ஏறிய போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவருக்கு முதலுதவி அளிக்க முயன்றனா். இருப்பினும் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் நந்தகுமாரின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.