கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.21.57 கோடி நிதியுதவி ஆட்சியா் தகவல்
கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட 1,874 பேருக்கு ரூ.21.57 கோடி நிதியுதவியை அரசு வழங்கியுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட 1,874 பேருக்கு ரூ.21.57 கோடி நிதியுதவியை அரசு வழங்கியுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்துள்ளவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா சிகிச்சை அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச சிகிச்சை அளிக்க 114 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகளை காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழுள்ள படுக்கை வசதிகள் குறித்து 1077, 1800 425 3993 ஆகிய கட்டணமில்லா எண்ணை தொடா்புகொள்ளலாம்.
மாவட்டத்தில் இதுவரை முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,874 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.21 கோடியே 57 லட்சத்து 63 ஆயிரத்து 975 நிதி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவது தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலா் கிஷோா்குமாரை 73730 04211, ஒருங்கிணைப்பாளா் சம்பத்தை 73730 04212 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். கரோனா சிகிச்சை மட்டுமின்றி கருப்பு பூஞ்சை நோய்க்கும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...