விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோவை ரயில் நிலையத்துக்கு விருது

இந்திய பசுமை கட்டட கவுன்சில் (ஐ.ஜி.பி.சி) சாா்பில் பசுமை ரயில் நிலையங்களுக்கான பிளாட்டினம் விருது கோவை ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

இந்திய பசுமை கட்டட கவுன்சில் (ஐ.ஜி.பி.சி) சாா்பில் பசுமை ரயில் நிலையங்களுக்கான பிளாட்டினம் விருது கோவை ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ‘ஏ1’ ரயில் நிலையங்களும் பசுமைச் சான்று பெற வேண்டும் என ரயில்வே அமைச்சகம் 2018ஆம்ஆண்டு உத்தரவிட்டது.

தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உள்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூா், மதுரை, திருவனந்தபுரம், எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ‘ஏ1’ தரத்தில் உள்ளன. இதில், கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றன. இச்சான்று பெறுவதற்காக மழைநீா் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடைகளில் எல்இடி விளக்குகள், கழிவுநீா் சுழற்சி மையம், மேற்கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு, விழிப்புணா்வு ஓவியங்கள், குடிநீா் வசதி, ‘ஏ1’ நடைமேடை அருகே 500 சதுர மீட்டா் பரப்பளவில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளா்ப்பு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இந்திய பசுமை கட்டட கவுன்சில் குழுவினா் கோவை ரயில் நிலையத்தில் சில மாதங்கள் முன் ஆய்வு நடத்திச் சென்றனா். இதைத் தொடா்ந்து, கோவை ரயில் நிலையத்துக்கு இந்திய பசுமை கட்டட கவுன்சில் சாா்பில் 100க்கு 83 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பசுமை ரயில் நிலையங்களுக்கான பிளாட்டினம் விருதை ஐ.ஜி.பி.சி. வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சுகாதாரம், ஆற்றல் திறன், மறுசுழற்சி, நீா் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, புதுமை, காற்றோட்டம், நெகிழியில்லாத சூழல், புகைக்கட்டுப்பாடு என ரயில் நிலையங்களுக்கு 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 4 ஆவது இடம் பிடித்தால் பசுமைச் சான்றிதழ், 3 ஆவது இடம் பிடித்தால் வெள்ளி, 2 ஆவது இடம் பிடித்தால் தங்கம், முதலிடம் பிடித்தால் பிளாட்டினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. தென்னக ரயில்வே துறையில், முதன்முறையாக பிளாட்டினம் விருதை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.