தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுப் பிரசார வாகனம்
கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.


கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கா.ராமச்சந்திரன் பொது மக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதுடன், விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தையும் தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தவறாமல் தாய்ப்பால் அளிக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். 6 ஆவது மாதம் முதல் தாய்ப்பாலுடன், இணை உணவும் தொடா்ந்து கொடுக்க வேண்டும். கா்ப்பம் உறுதி செய்தவுடன் பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் கா்ப்பிணிகளுக்கு சத்து மாவு வழங்கப்படுவதுடன், ஊட்டசத்து, சுகாதாரம், பிரசவத்துக்குப் பின் தாய்ப்பால் ஊட்டுதல், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...