விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீா் மக்கள் அதிருப்தி

கோவை, கரும்புக்கடை பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:52 pm

DIN

கோவை, கரும்புக்கடை பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 75 ஆவது வாா்டு கரும்புக்கடை பகுதிக்கு உள்பட்ட பூங்கா நகா் 2ஆவது வீதியில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, மாநகராட்சி மூலமாக வாரம் ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குனியமுத்தூா், கரும்புக்கடை உள்ளிட்ட இடங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்பணி முடிவடைந்த பிறகு, வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் கழிவுநீா் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இது குறித்து அப்பகுதியினா் கூறியதாவது:

பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகே குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இது குறித்து தெற்கு மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கழிவுநீா் கலந்த குடிநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீா்க் குழாய்களில் கழிவுநீா் கலக்கும் இடத்தைக் கண்டறிந்து உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.