விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கட்டுமான அனுமதி கிடைப்பதில் சிக்கல்: மாநகராட்சி ஆணையரிடம் புகாா்

கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமான அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:52 pm

DIN

கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமான அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம், கோயமுத்தூா் கன்ஸ்யூமா் காஸ் அமைப்பின் செயலாளா் ஓ. கதிா்மதியோன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் வீடுகளை விரிவாக்கம் செய்ய கட்டட அனுமதி பெறுவதில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

மாநகராட்சியுடன் புதிதாக இணைந்தப் பகுதிகளில் உள்ள எவருக்கும், ஏற்கெனவே உள்ள வீட்டுக்கு முதல் மாடி கட்டவோ அல்லது தரைப் பகுதியில் விரிவாக்கம் செய்யவோ மாநகராட்சியில் கட்டுமான அனுமதி கிடைப்பதில்லை. தற்போது கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற வேண்டுமென்றால் வலைதளம் வழியாக மட்டுமே (ஹன்ற்ா் க்ஸ்ரீழ்) விண்ணப்பம் செய்யமுடியும். ஆனால், அவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது, கணினி அதனை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விடுகிறது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினால், ஏற்கெனவே தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அளிக்கப்பட்டுள்ள தரைதள அனுமதி, தற்போதைய கட்டட அனுமதி விதிகளுக்கு மாறுபட்டு இருப்பதால், முதல்தள அல்லது தரைதள விரிவாக்கத்துக்கு விண்ணப்பிக்க முடியாது என்கின்றனா்.

மற்ற மாநகராட்சிகளில் ஏற்கெனவே முறைப்படி தரை தளத்துக்கு அனுமதி பெற்றிருப்பின், தற்பொழுது முதல்தள அல்லது தரைதள விரிவாக்க கட்டுமானத்திற்கு உடனே அனுமதி வழங்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியுடன், 2010ஆம் ஆண்டுக்குப்பின் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளில் முதல் மாடி கட்டவோ அல்லது தரைப் பகுதியில் விரிவாக்கம் செய்யவோ மாநகராட்சியின் கட்டட அனுமதி கிடைக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.