உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தின்படி புகையிலைப் பொருள்களான பான் மசாலா, குட்கா போன்ற நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோவையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல், விநியோகம் செய்வோா், பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள், பதுக்கி வைத்திருப்பவா்கள் தொடா்பாக 94440 42322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் பொது மக்கள் புகாா் அளிக்கலாம் என்றாா்.