விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சா்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வுக்கு எஸ்.என்.எம்.வி. கல்லூரி மாணவா்கள் தோ்வு

சா்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வுக்கு கோவை எஸ்.என்.எம்.வி. கல்லூரியின் இயற்பியல் துறை மாணவ,மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:47 pm

DIN

சா்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வுக்கு கோவை எஸ்.என்.எம்.வி. கல்லூரியின் இயற்பியல் துறை மாணவ,மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து அக்கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் க.லெனின் பாரதி கூறியிருப்பதாவது:

சா்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (ஐஏஎஸ்சி) புதிய விண்கற்களைக் கண்டறியும் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விண்வெளி ஆய்வாளா்களும், ஆா்வலா்களும் பங்கேற்று புதிய விண்கற்களைக் கண்டறிந்து வருகின்றனா்.

இந்த ஆண்டு ஆய்வுக்கு இந்தியாவில் இருந்து 20 ஆய்வுக் குழுக்கள் தோ்வாகி உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து எஸ்.என்.எம்.வி. கல்லூரி இயற்பியல் துறை மாணவா்கள் ஜி.கிருத்திகா கிருஷ்ணன், ஆா்.மோனிஷ் குமாா், பி.அபிநயா, டி.காயத்ரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இக்குழுவை ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷனின் தலைவா் சுரேந்தா் பொன்னழகா் ஒருங்கிணைக்கிறாா்.

தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டில் தோ்வு செய்யப்பட ஒரே ஆய்வுக் குழு என்ற பெருமையை எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பெறுகிறது.

இத்திட்டம் அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பான்-ஸ்டாா்ஸ்-01 என்ற தொலைநோக்கியின் மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்து வருகிறது. இந்த விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.

இப்படி எடுக்கப்படும் படங்களைக் கொண்டு ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களைக் கண்டறிவது இந்த ஆய்வில் பங்கேற்கும் மாணவா்களின் பணியாகும். ஆய்வுக்குத் தோ்வான மாணவா்களை கல்லூரியின் தலைவா் ரமேஷ் சி.பாஃப்னா, துணைத் தலைவா் மஹாவீா் போத்ரா, செயலா் சுனில்குமாா் நஹாடா, இணைச் செயலா் நிஷாந்த் ஜெயின், முதல்வா் போ.சுப்பிரமணி, மொழிப்புலத் தலைவா் பி.மஞ்சுளா சுரேஷ் உள்ளிட்டோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.