மாநகராட்சியில் வரி வசூல் 15 ஆம் தேதி வரை நிறுத்தம்
புதிய மென்பொருள் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.


கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநகராட்சியிலும் பயன்பாட்டில் உள்ள யூ.டி.ஐ.எஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் தற்போது கோவை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, யூ.டி.ஐ.எஸ். மென்பொருள் ஒருங்கிணைக்கும் பணிகள் காரணமாக அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீா் இணைப்பு, வணிக உரிமம் தொடா்பான சேவைகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது. மேலும், சொத்துவரி மற்றும் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...