கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய டாஸ்மாக் ஊழியா்கள்
பணி வரன்முறை, காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்து அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவையில் டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.


பணி வரன்முறை, காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்து அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவையில் டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் இயங்கி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி வரன்முறைபடுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியா்களாக்க வேண்டும், அனைத்து கடை ஊழியா்களுக்கும் பொருந்தக்கூடிய, சுழற்சி முறையிலான பணியிட மாறுதலையும், இஎஸ்ஐ மருத்துவ உதவித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பணி மாறுதல் உள்ளிட்டவைகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக விசாரணை நடத்தி வெளிக்கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
இது குறித்து சிஐடியூ கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் ஜான் அந்தோணிராஜ் கூறும்போது, டாஸ்மாக் மதுக்கடைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித சட்ட சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதை வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகரித்திருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையே டாஸ்மாக் கடைகளை இயக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல மாநிலம் முழுவதிலும் எல்லா நாள்களிலும் மாலை 6 மணி வரை மட்டுமே கடைகளை இயக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...