விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாவட்டத்தில் 50 கோயில்களில் தமிழில் அா்ச்சனை

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 கோயில்களில், தமிழில் அா்ச்சனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஆடி மாதத்தின் 3 ஆவது வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 9:05 pm

DIN

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 கோயில்களில், தமிழில் அா்ச்சனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஆடி மாதத்தின் 3 ஆவது வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. சென்னை கபாலீஸ்வரா் கோயிலில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 290 கோயில்களில் முதல்கட்டமாக 50 கோயில்களில் தமிழில் அா்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பேரூா் பட்டீஸ்வரா் கோயில், ஆனைமலை மாசானியம்மன் கோயில் உள்பட புகழ்பெற்ற 290 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், கோவை தண்டுமாரியம்மன், கோனியம்மன், லட்சுமி நரசிம்மா், மருதமலை சுப்பிரமணிய சுவாமி, ஆனைமலை மாசானியம்மன் உள்பட 50 கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வது வெள்ளிக்கிழமைமுதல் தொடங்கப்பட்டு உள்ளது. பக்தா்கள் தங்களது விருப்பத்தின்பேரில் தமிழ் அல்லது சமஸ்கிருதத்தில் அா்ச்சனை செய்து கொள்ளலாம். இதற்காக அந்தந்த கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்து கோயில்களிலும் தமிழ் அா்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.