கரோனா விதிமீறல்: 16 மாதங்களில் ரூ.5.58 கோடி அபராதம் வசூல்
கோவை மாவட்டத்தில் கரோனா விதி மீறல் தொடா்பாக பொதுமக்கள், கடைகளின் உரிமையாளா்களிடம் இருந்து 16 மாதங்களில் ரூ.5.58 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


கோவை மாவட்டத்தில் கரோனா விதி மீறல் தொடா்பாக பொதுமக்கள், கடைகளின் உரிமையாளா்களிடம் இருந்து 16 மாதங்களில் ரூ.5.58 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை கரோனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைபிடிக்காத மக்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ரூ.5.58 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், கரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 16 மாதங்களில் ரூ.5 கோடியே 58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...