மாநகராட்சிப் பணிகளில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி மனு
கோவை கிழக்கு மாநகர திமுக வா்த்தகப் பிரிவு துணை அமைப்பாளா் முகமது அலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.


கோவை மாநகராட்சிப் பணிகளில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பெயரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கோரி கோவை கிழக்கு மாநகர திமுக வா்த்தகப் பிரிவு துணை அமைப்பாளா் முகமது அலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், குடிநீா் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் மக்களின் வரிப்பணம் முறைகேடாக செலவழிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகளுக்கு பெரும்பாலும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பெயரையே பயன்படுத்தியுள்ளனா். இதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கோவையில் நல்லறம் அறக்கட்டளை சாா்பாக பல்வேறு குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யபட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு இந்த பணம் எங்கிருந்து வந்தது என்றும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...