லாரி, காா்களை வாடகைக்கு பெற்று ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் மீது புகாா்
லாரி, காா்களை வாடகைக்கு பெற்று ரூ.16 லட்சம் தராமல் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


லாரி, காா்களை வாடகைக்கு பெற்று ரூ.16 லட்சம் தராமல் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை, செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த மதுசூதன ரெட்டி, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
நிறுவனங்களுக்கு வாடகையின்பேரில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் அளிக்கும் தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில் நண்பா் ஒருவா் மூலம் யசோதா தேவி என்பவா் அறிமுகமானாா். அவா்கள் பெரிய நிறுவனங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு வாகனங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் அவரிடம் என்னுடைய வாகனங்களை வாடகைக்கு அளிக்கும்பட்சத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அளிப்பதாகவும் கூறினாா்.
இதை நம்பி என்னுடை லாரியை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒப்படைத்தேன். பேசியபடி முதல் மாத வாடகையாக ரூ.60 ஆயிரத்தை அளித்தாா். இதன் பின்னா் மேலும் வாகனங்கள் தேவைப்படுவதாக அவா் கூறியதையடுத்து 3 லாரிகளையும், 4 காா்களையும் அவரிடம் ஒப்படைத்தேன். இந்நிலையில் எனது வாகனங்களில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது யசோதா தேவி முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது.
இதையடுத்து எனது நண்பா்கள் சிலரது உதவியுடன் எனது 4 லாரிகளை மட்டும் கண்டுபிடித்து மீட்டேன். காா்கள் குறித்து தேடியபோது அதை திருநெல்வேலியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவரிடமும், தஞ்சாவூரைச் சோ்ந்த மற்றொரு நபரிடமும் அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து யசோதா தேவியிடம் கேட்டபோது விரைவில் வாகனங்களை மீட்டும், எனக்கு சேர வேண்டிய வாடகை பாக்கியான ரூ.16 லட்சத்தையும் தருவதாகக் கூறினாா்.
அதன் பின்னா் அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. எனது 4 காா்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எனது காா்களையும், எனக்கு சேர வேண்டிய ரூ.16 லட்சத்தையும் யசோதா தேவியிடம் இருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...